Search HerePost Ad Here
annai-jeweldwinsnagesmcdsthangam-bannershipmangalam-tttanto-ad-bannerrezaakshayawin--xeroxadsskalyana-koodam-bannerFRONTom-murugashunmuganadarassisibannerwood rezatrarajabro2alisha-hostelvigilsmani-soundssky-banner16jefind

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் நம்பகமான கூட்டணிக் கட்சி தி.மு.க., : பிரணாப்

சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதி மற்றும் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களிடம் ஆதரவு கேட்டு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர் பிரணாப் முகர்ஜி, தேர்தல் பிரசாரத்தை சென்னையிலிருந்து துவக்கினார்.டில்லியிலிருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு மாலை நான்கு மணிக்கு வந்த பிரணாப் முகர்ஜியை, தி.மு.க., எம்.பி., டி.ஆர்.பாலு மற்றும் காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் ஆகியோர் விமான நிலையத்தில் வரவேற்றனர். அங்கிருந்து, கருணாநிதியின் சி.ஐ.டி., காலனி இல்லத்துக்கு, மாலை 5 மணிக்கு, பிரணாப் முகர்ஜி வந்தார்.

அகல்விளக்கு : அவருக்கு, சாலை இருபுறங்களிலும் தி.மு.க., மற்றும் காங்கிரஸ் கொடிகளை கட்டி, தமிழகத்தின் பாரம்பரியமான நாதஸ்வரம், மேளதாளம், கேரளத்தின் ஜன்டை மேளம், மேற்கத்திய பேண்டு வாத்தியம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. அகல் விளக்கை ஏந்திய இளம்பெண்கள் அவருக்கு மலர்களைத் துவினர். வீட்டு வாசலில், "இதயம் கனிந்த நல்வரவு' என, மாகோலம் இடப்பட்டு இருந்தது.சி.ஐ.டி., காலனி வீட்டில் 30 நிமிடம் கருணாநிதி, கனிமொழி எம்.பி., ஆகியோருடன் விவாதித்தார். அப்போது, தனக்கும் கருணாநிதிக்கும் உள்ள, நீண்ட அரசியல் வாழ்க்கையை பகிர்ந்து கொண்டார்.
இதன்பின், பிரணாப் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் என்ற முறையில், ஓட்டு சேகரிக்க வந்துள்ளேன். தி.மு.க., ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் நம்பகமான கூட்டணிக் கட்சி. அதன் தலைவர் கருணாநிதி, 50 ஆண்டுகளுக்கும் மேலாக, அரசியலில் முக்கிய அங்கம் வகிக்கிறார். எனவே, எனது தேர்தல் பிரசாரத்தை இங்கிருந்து துவங்குவதில் பெருமையடைகிறேன்.
ஆதரவு:நாட்டின் அரசியல் அமைப்பு சட்டம், ஜனாதிபதியின் பணிகளையும், செயல்பாடுகளையும் வகுத்துள்ளது. அதன்படி செயல்படுவேன். நாட்டின் திட்டங்களை வகுக்கும் பணியை பிரதமர் தலைமையிலான அமைச்சரவையும், பாராளுமன்றமும் செய்யும். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள கட்சிகள் மட்டும் அல்லாமல், ஐக்கிய ஜனதாளம், சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ், சமதா கட்சி, அகாலிதளம், சிவசேனா என பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அவர்களுக்கு எனது நன்றி.இவர்கள் தவிர, ஜனாதிபதி வேட்பாளராக யாரையும் ஆதரிக்காமல் உள்ள கட்சிகளிடமும் ஆதரவைக் கேட்பேன். நாடு விடுதலை அடைந்தபின், 1952 முதல் ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்.பி.,க்கள், - எம்.எல்.ஏ.,க்கள் ஆகியோர் ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்கின்றனர். அதன் அடிப்படையில், கூட்டணிக் கட்சிகளின் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களிடம் ஆதரவு திரட்டுகிறேன்.ஜனாதிபதி தேர்தலில், அதிசயங்கள் ஏதாவது நடந்து, வெற்றி வாய்ப்பு மாறுமா என்று கேட்கிறீர்கள். அதிசயங்கள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. ஜனாதிபதியை தேர்வு செய்ய எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை தான் முக்கியம். அந்த எண்ணிக்கையிலான ஆதரவு எனக்கு உள்ளது.இவ்வாறு, பிரணாப் கூறினார்.

ஓட்டலில் விருந்து: எந்த வேட்பாளரையும் ஆதரிக்காமல் உள்ள கட்சிகளிடமும் ஆதரவு கேட்பேன் என அவர் கூறியதன் மூலம், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளதோடு, அவரிடம், நேரில் ஆதரவு கேட்பேன் என்பதையும் பிரணாப் சூசகமாக தெரிவித்துள்ளார்.

சி.ஐ.டி., காலனி வீட்டிலிருந்து, கருணாநிதியின் காரில், விருந்து அளிக்கப்படும் அடையாறு "பார்க் ஷரடன்' ஓட்டலுக்கு பிரணாப் சென்றார். அங்கு, தி.மு.க, பொருளாளர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் அழகிரி மற்றும் தி.மு.க., முன்னணி தலைவர்கள் பிரணாப் முகர்ஜியை வரவேற்று, விருந்து அளிக்கப்படும் ஓட்டல் அறைக்கு அழைத்துச் சென்றனர்.

Followers