கூடங்குளம்: இடிந்தகரையில் பொதுச்சொத்துகளை சேதப்படுத்தி வரும், கூடங்குளம்
அணுஉலை எதிர்ப்பாளர்களால், அவர்கள் மீதான வழக்கு அதிகரிக்க
வாய்ப்புள்ளது.இடிந்தகரையில் பதுங்கியுள்ள உதயகுமாரை காப்பாற்ற, அவரின்
ஆதரவாளர்கள், பொதுச்சொத்துகள் அதிக அளவில் சேதப்படுத்தி வருகின்றனர்.
ரோடுகள் ஏற்கனவே துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், தொலை தொடர்பு சாதனங்கள்
சூறையாடப்பட்டுள்ளன. பி.எஸ்.என்.எல்., கம்பங்கள் சாய்க்கப்பட்டுள்ளன.
நிழற்குடையிலிருந்த சிமென்ட் நாற்காலிகளை பெயர்த்து, ரோட்டில்
போட்டுள்ளனர்.ஏற்கனவே நூற்றுக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள
நிலையில், பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தாக கூடுதல் வழக்குகள் அவர்கள்
மீது பதிவாக வாய்ப்பு உள்ளது. அதற்கான கணக்கெடுப்பில், வருவாய்த் துறையினர்
தீவிரமாக உள்ளனர்.