நடைபெற்று முடிந்த ஐபிஎல் சீஸன் 5 போட்டித் தொடரின் போது ஸ்பாட்
பிக்சிங் எனப்படும் சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 இந்திய கிரிக்கெட் வீரர்களை
சஸ்பெண்ட் செய்வதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. மேலும்
இப்புகார் குறித்து விசாரிக்க கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு அதிகாரி
ரவி சவானியை நியமனம் செய்தது.
அவர் சூதாட்டத்தில்
ஈடுபட்டதாக கூறப்படும் உள்ளூர் கிரிக்கெட் வீரர்களான டி.பி. சுதிந்திரா
(டெக்கான் சார்ஜன்ஸ்), மோனிஷ் மிஸ்ரா (புனே வாரியர்ஸ்), சலப் ஸ்ரீவாத்சவா,
அமித் யாதவ் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்), டெல்லியை சேர்ந்த அபினவ் பாலி ஆகிய 5
வீரர்களிடம் விசாரணை நடத்தினார். அவர் தனது விசாரணை அறிக்கையை கிரிக்கெட்
வாரியத்திடம் தாக்கல் செய்திருந்தார்.
இந்த அறிக்கையை கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழுவான கிரிக்கெட் வாரிய தலைவர் என்.சீனிவாசன், துணைத் தலைவர்கள் அருண் ஜெட்லி, நிரஞ்சன்ஷா ஆகியோர் ஆய்வு செய்தனர். இதில் இந்த 5 பேரும் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனை அடுத்து ஸ்பாட்
பிக்சிங்கில் ஈடுபட்ட டி.பி. சுதிந்திரா கிரிக்கெட் விளையாடுவதற்கு ஆயுள்
கால தடையும், சலப் ஸ்ரீவாத்சவாவிற்கு 5 ஆண்டு கால தடையும், மோனிஷ் மிஸ்ரா,
அபினவ் பாலி, அமித் யாதவ் ஆகியோருக்கு ஓராண்டு காலத் தடையும்
விதிக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.